இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: விரைவில் அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
What's Your Reaction?