“இது ஓர் உண்மைக் கதை” - அடுத்த படம் குறித்து விஜய் மில்டன் தகவல்

விஜய் மில்டன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகவுள்ளது. ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமானார்.

May 12, 2025 - 18:45
 0  1
“இது ஓர் உண்மைக் கதை” - அடுத்த படம் குறித்து விஜய் மில்டன் தகவல்

விஜய் மில்டன் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. ‘கோலி சோடா’ என்ற படத்தின் மூலம் முன்னணி ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமானார். அதற்குப் பின் பல படங்களை இயக்கினாலும், முதல் படம் அடைந்த வெற்றி அளவுக்கு எதுவும் வெற்றியடையவில்லை.

தற்போது அடுத்து இயக்கவுள்ள படத்தை அறிவித்துள்ளார் விஜய் மில்டன். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழிலும் நாயகனாக அறிமுகமாகிறார் ராஜ் தருண்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow