இணையத்தில் கசிந்தது ராஜமவுலி பட காட்சி!

‘ஆர்ஆர்ஆர்‘ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி.

Sep 7, 2025 - 11:20
 0  2
இணையத்தில் கசிந்தது ராஜமவுலி பட காட்சி!

‘ஆர்ஆர்ஆர்‘ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இருக்கும் என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன் முக்கியமான காட்சிகள் காசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow