ஆலங்குடி, திட்டை கோயில்களில் குரு பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயந்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

May 12, 2025 - 06:30
 0  3
ஆலங்குடி, திட்டை கோயில்களில் குரு பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயந்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிறப்கல் 1.19 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow