ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. 

Sep 2, 2025 - 19:20
 0  8
ஆப்கன் நிலநடுக்க உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு; 3,124 பேர் காயம்

காபூல்: ஆப்கனிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதில் பாகிஸ்​தான் எல்லை​யில் உள்ள ஆப்​க​னின் கிராமங்​கள், பல மாடி கட்​டிடங்​கள் சரிந்து விழுந்​தன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக அமெரிக்க புவி​யியல் ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. குணார் மாகாணத்​தின் நூர் கால், சாவ்​கி, வாட்​பூர், மனோகி மற்​றும் சபா தாரா பகு​தி​களில் வீடு​கள், கட்​டிடங்​கள் நொறுங்கிய​தால் உயி​ரிழப்பு அதி​கரித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow