ஆப்கனில் இரு வேறு சாலை விபத்துகளில் 50 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர்.

காபூல்: தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் - காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 76 பேர் காயம் அடைந்தனர்.
What's Your Reaction?