ஆண்டாள் கோயில் கொடியேற்றத்தில் பட்டர்கள், பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின் போது, பட்டர்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கொடியேற்றத்தின் போது, பட்டர்கள் மற்றும் பரிசாரகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. பரத்வாஜ் பட்டர் பூஜைகள் செய்து கொடியேற்றினார். கொடியேற்றிய பின் கொடிமரத்தில் தர்ப்பை புல் கட்டுவதற்காக பத்ரி நாராயண பட்டர் கொடிமரத்தின் மீது ஏறினார். அப்போது ஸ்தானிகம் ரமேஷ் மகன் பிரசன்னா கொடிமரத்தில் ஏறியதற்கு, பட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
What's Your Reaction?