ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்பு அன்னதானம் வழங்கி கோயில்களில் வழிபாடு செய்தனர்.

Jul 24, 2025 - 19:00
 0  4
ஆடி அமாவாசை: தேனி வீரபாண்டி பெரியாற்றங்கரையில் தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்

தேனி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வீரபாண்டி பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கான தர்ப்பண வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்பு அன்னதானம் வழங்கி கோயில்களில் வழிபாடு செய்தனர்.

இந்துக்களின் முன்னோர் வழிபாடாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்நாட்களில் கடற்கரை, ஆற்றங்கரை மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் ஆசி குடும்பத்துக்கு கிடைப்பதுடன், சந்ததியும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow