ஆக்‌ஷன் கதையில் மீண்டும் உன்னி முகுந்தன்

பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார்

Jul 21, 2025 - 10:30
 0  5
ஆக்‌ஷன் கதையில் மீண்டும் உன்னி முகுந்தன்

பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்கிறார். இதை உன்னி முகுந்தன் பிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்‌ஷன் அவதாரத்தில் இதில் நடிக்க இருக்கிறார். அவர் நடித்து வெளியான ‘மார்கோ’, அதிகமான வன்முறைக்காக விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் இணைந்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள உன்னி முகுந்தன், “இயக்குநர் ஜோஷியுடன் இணைவது கனவு நனவாகும் செயல் மட்டுமல்ல, அது ஓர் உணர்வு. அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்த ஒவ்வொரு நடிகரும் அதை உணர முடியும். இந்தப் படம் எனக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Source : www.hindutamil.in

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow