“அவசர கதி பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை; இந்தியாவின் நலனே பிரதானம்” - பியூஷ் கோயல்
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
What's Your Reaction?