அல்லு அர்ஜுன் திடீர் கைது: நடிகை ராஷ்மிகா கண்டனம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம், கடந்த 5-ம் தேதி வெளியானது. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, 4-ம் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது

Dec 14, 2024 - 03:25
 0  7
அல்லு அர்ஜுன் திடீர் கைது: நடிகை ராஷ்மிகா கண்டனம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம், கடந்த 5-ம் தேதி வெளியானது. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, 4-ம் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இதைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா வந்ததால் அவர்களை காண கூட்டம் அலைமோதியது.

நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவர் மகன் படுகாயம் அடைந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன்,திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் மீது சிக்கடபள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow