அல்லா கசன்ஃபர் அபார பந்துவீச்சு: முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கன்
வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபரின் அற்புத செயல்பாடு வெற்றிக்கு துணையாக அமைந்தது.

ஷார்ஜா: வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபரின் அற்புத செயல்பாடு வெற்றிக்கு துணையாக அமைந்தது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
What's Your Reaction?