அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம்!
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக் கன்றுகள் நடுவ தில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாக உள்ளது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கதாக இப்பகுதி மக்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
What's Your Reaction?