‘அமைதி அதிபர்’ - ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது. 

Oct 9, 2025 - 12:10
 0  1
‘அமைதி அதிபர்’ - ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President) என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டிருந்த ட்ரம்ப், ‘நார்வேஜியன் நோபல் கமிட்டி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசைக் கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும்’ என்று நம்பிக்கையிழந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow