‘அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முறிந்தது’ - 25% கட்டண விதிப்பால் கனடா பிரதமர் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டோமொபைல் பொருள்களுக்கான 25 சதவீத கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுடனான பழைய உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

ஒட்டோவா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டோமொபைல் பொருள்களுக்கான 25 சதவீத கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுடனான பழைய உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் கார்னி, “நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு அடிப்படையில் அமெரிக்காவுடனான பழைய ஆழமான உறவு முடிவுக்கு வந்து விட்டது. நமது பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுக்கான பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான நேரம் விரைவில் வரும்.
What's Your Reaction?