அமெரிக்கா - சீனா வரி யுத்தம் எதிரொலி: தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.68,000-ஐ கடந்தது!

தங்கம் விலை இன்று (ஏப்.10) ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனையாகிறது.

Apr 10, 2025 - 11:15
 0  2
அமெரிக்கா - சீனா வரி யுத்தம் எதிரொலி: தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.68,000-ஐ கடந்தது!

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்துள்ளது. முன்னதாக நேற்று தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.67,280-க்கு விற்பனையானது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று பவுனுக்கு ரூ.1200 அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2680 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.102-க்கும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow