அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை

அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் நிவாரணத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது

Aug 17, 2025 - 13:50
 0  3
அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க அவசர கால கடனுதவி தேவை:‘சைமா’ கோரிக்கை

கோவை: அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடன் மற்றும் 5 சதவீத வட்டி மானியத்துடன் நிவாரணத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என தென்னிந்திய மில்கள் சங்கம்(சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ‘சைமா’ தலைவர் டாக்டர் எஸ் கே.சுந்தரராமன் கூறியதாவது: நாட்டின் ஒட்டு மொத்த ஜவுளி உற்பத்தித்திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள தமிழ்நாடு ஜவுளித் தொழில், நாட்டின் மொத்த ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow