அமெரிக்க தூதரகங்களில் 41% மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

Mar 25, 2025 - 06:25
 0  4
அமெரிக்க தூதரகங்களில் 41% மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2024-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர். இதற்கு அடுத்து 2.77 லட்சம் சீன மாணவர்கள். 43,149 தென்கொரிய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்ஸிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow