அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட 4 மொழிகள்
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, நியூயார்க் நகரின் வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, நியூயார்க் நகரின் வாக்குச் சீட்டில் வங்காளம் உட்பட சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் நியூயார்க் நகரில் அதிகம் உள்ளனர். இங்கு 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். இங்கு அதிகம் பேசப்படும் மொழிகளில் 4 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த மொழிகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. வங்காளம், சீன, ஸ்பேனிஷ், கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் வாக்குச்சீட்டில் இடம் பெற்றுள்ளன. இந்திய மொழியான வங்காளம் சேர்க்கப்பட்டிருப்பது, இந்திய கலாச்சாரத்தை மட்டும் அல்லாத இங்கு இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதையும் காட்டுகிறது.
What's Your Reaction?