அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

Feb 14, 2025 - 06:40
 0  4

பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து அமெரிக்க அதிபர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow