‘அனுபவமே எங்கள் பலம்’ - ஆஷஸ் தொடர் குறித்து ஹேசில்வுட்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன.

Nov 9, 2025 - 16:40
 0  3
‘அனுபவமே எங்கள் பலம்’ - ஆஷஸ் தொடர் குறித்து ஹேசில்வுட்

சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த தொடரில் அனுபவமே தங்கள் பலம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில், 14 பேர் 30+ வயதை கடந்தவர்கள். குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35), ஸ்காட் போலண்ட் (36) ஆகியோர் முதல் போட்டிக்கான அணியில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow