‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ - ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம்

ஜூன் 11-ம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Jun 7, 2025 - 13:20
 0  3
‘WTC ஃபைனலில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக தேசம் நிற்கும்’ - ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சிகரம்

ஜூன் 11-ம் தேதியன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டி தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய தருணம், தேசமே எங்கள் அணியின் பின்னால் இருக்கிறது என்று 360 டிகிரி பேட்ஸ்மேன், ‘ஒயிட் ரிச்சர்ட்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் உணர்ச்சி வயப்பட்டுள்ளார்.

தனியார் டி20 லீக் கிரிக்கெட்டுகளின் பெருக்கமும் ஐசிசியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணியின் ஆதிக்கத்தினால் டெஸ்ட் போட்டி என்பதே இந்த 3 அணிகளுக்கும் இடையேயாகக் குறுக்கப்பட்டிருக்கும் வேளையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடுவது உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய தருணம் தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow