IND vs AUS முதல் டெஸ்ட் | திருப்பிக் கொடுத்த இந்திய அணி: ஆஸ்திரேலியா 67/7  

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Nov 22, 2024 - 17:05
 0  6
IND vs AUS முதல் டெஸ்ட் | திருப்பிக் கொடுத்த இந்திய அணி: ஆஸ்திரேலியா 67/7  

பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளை​யாடு​வதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்​தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ரோஹித் சர்மா விளை​யாடாத​தால் இந்திய அணியானது வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமை​யில் களமிறங்​கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியில், நிதிஷ்குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பந்து 37 ரன்களையும் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 150 ரன்களைச் சேர்த்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow