El 47: உண்மைக்கு நெருக்கமான ஒரு திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 4

கத்தலான், ஸ்பேனிஷ் மொழியில் மனோலா விட்டலின் கதை மாபெரும் உந்துசக்தியாக இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு கச்சிதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

Nov 5, 2025 - 17:30
 0  4
El 47: உண்மைக்கு நெருக்கமான ஒரு திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 4

“இந்தப் படத்தைப் பார்த்துவிடுங்கள்” என்று அண்ணன் செழியனிடமிருந்து ஒரு செய்தி. பாலைவனத்தில் மழை பெய்தது போலிருந்தது. உண்மைதான், கண்களும், இதயமும் நல்ல திரைப்படத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன. காற்றுக்கு ஏங்கியபடி புழுக்கத்தில் இருக்கும்போது காற்று வீசினால்? வீசியது. எல்லாரும் உறங்கியபின் எழுந்துகொண்டேன். திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைப் படித்தேன். கடந்த வருடம் ஸ்பெயினிலிருந்து வெளிவந்திருக்கிறது. கூடுதலாக உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உண்மைக்கு நெருக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் மார்ஷெல் பரெனா, 110 நிமிடங்கள் அங்கும் இங்கும் அசையவிடவில்லை. புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் ஆல்பர்ட்டோ மரினியின் அற்புதமான எழுத்தும், இஷாக் விலாவின் கச்சிதமான ஒளிப்பதிவும், ஆர்னவ் பேடலரின் உயிரோட்டமான இசையும் இப்போது வரையிலும் உள்ளுக்குள் உலவிக்கொண்டிருக்கிறது. மொழிமாற்றும் வசதி இருந்தும் மாற்றவில்லை. கதலான் - ஸ்பானிஷ் மொழியிலேதான் பார்த்தேன். திரைப்படம் என்பது காட்சிமொழியல்லவா! இயக்குநரின் தேவையை மனோலா விட்டலாக வாழ்ந்திருக்கும் எட்வர்ட் பெர்ணாண்டஸில் இருந்து அனைவரும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow