ChatGPT சேவை உலக அளவில் முடக்கம்: லட்சக்கணக்கான பயனர்கள் தவிப்பு
உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு.

சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செயலி வடிவில் சாட்ஜிபிடி-யை மொபைல் போனில் பயன்படுத்த முடிகிறது.
What's Your Reaction?