91 ஆண்டுகளில் முதன்முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்த இந்தியா!
இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் 1933-ம் ஆண்டில் விளையாடத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 91 ஆண்டுகளான நிலையில், இந்திய அணி முதன்முறையாக 0-3 என்ற கணக்கில் தொடரை உள்நாட்டில் முழுமையாக இழந்துள்ளது.

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் 1933-ம் ஆண்டில் விளையாடத் தொடங்கியது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 91 ஆண்டுகளான நிலையில், இந்திய அணி முதன்முறையாக 0-3 என்ற கணக்கில் தொடரை உள்நாட்டில் முழுமையாக இழந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு, புனே மற்றும் மும்பை என மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது. உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா முழுவதுமாக இழப்பது இதுவே முதல்முறை. இந்த தொடர் மோசமான சாதனையாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
What's Your Reaction?