46-வது படக்கதையுடன் பழநி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா இன்று (ஜூன் 5) தனது 46-வது படக்கதையுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா இன்று (ஜூன் 5) தனது 46-வது படக்கதையுடன் வந்து தரிசனம் செய்தார்.
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தை, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை நடிகர் சூர்யாவும், இயக்குநர் வெங்கி அட்லூரியும் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். அவர்கள் பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தனர்.
What's Your Reaction?