2024-ல் 241 படங்கள் ரிலீஸ், 7% மட்டுமே வெற்றி: தமிழ் சினிமாவில் 93% திரைப்படங்கள் நஷ்டம்!

ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இந்த வருடத்தின் கடைசி வாரமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 2024-ம் ஆண்டு, 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Dec 31, 2024 - 10:45
 0  2
2024-ல் 241 படங்கள் ரிலீஸ், 7% மட்டுமே வெற்றி: தமிழ் சினிமாவில் 93% திரைப்படங்கள் நஷ்டம்!

ஒவ்வொரு வருடமும் தமிழில் உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இந்த வருடத்தின் கடைசி வாரமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்து 2024-ம் ஆண்டு, 241 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் மெகா பட்ஜெட், மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும். கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது குறைவு. 2023-ல் 256 திரைப்படங்கள் வெளியாகி இருந்தன.

2024-ல் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தி கோட், இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய 4 படங்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ‘தி கோட்’ மட்டுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow