10 மணி நேரத்தில் 50+ மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டாக்சிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

‘யஷ்’ நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியான 10 மணி நேரத்தில் 50+ மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Jan 8, 2025 - 23:00
 0  4
10 மணி நேரத்தில் 50+ மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டாக்சிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

பெங்களூரு: யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியான 10 மணி நேரத்தில் 50+ மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதனை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ யஷ் பிறந்தநாளான இன்று (ஜன.08) படக்குழு வெளியிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow