நடிகர் தனுஷ் ரூ.1 கோடி கேட்டு வழக்கு: நயன்​தாரா பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 13, 2024 - 08:10
 0  5
நடிகர் தனுஷ் ரூ.1 கோடி கேட்டு வழக்கு: நயன்​தாரா பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவண படமாக தயாரித்தது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow