சுய உதவிக் குழுக்களின் தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.2.22 கோடி நிதி - தமிழக அரசு
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் தேனீ வளர்ப்புத் தொகுப்புக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் தேனீ வளர்ப்புத் தொகுப்புக்கு ரூ.2.22 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு நவீன தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் அதற்கான நிதியுதவியை வழங்கும் வகையில் நடப்பாண்டு ரூ.2.22 கோடியில் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்க தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
What's Your Reaction?