ஹாங் காங் ஒபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் சாட்விக்-ஷிராக்

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்-ஷிராக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

Sep 13, 2025 - 09:15
 0  3
ஹாங் காங் ஒபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் சாட்விக்-ஷிராக்

ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக்-ஷிராக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரிஃப் ஜுனைடி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 64 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow