ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

‘கோ​விந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்​டம் நேற்று கோலாகலமாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்​தனர்.

Jul 29, 2025 - 05:45
 0  3
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘கோ​விந்தா கோபாலா’ என முழங்க ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் கோயில் ஆடிப்​பூர தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்​தனர்.

ஆண்​டாள் அவதரித்த ஆடிப்​பூர தேரோட்​டத் திரு​விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்​டாள் ரெங்​க மன்​னார் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தனர். விழாவையொட்டி தின​மும் காலை ஆடிப்​பூரக் கொட்​டகை​யில் ஆண்​டாள் ரெங்​கமன்​னாருக்கு சிறப்பு திரு​மஞ்​சன​மும், மாலை சிறப்பு அலங்​காரத்​தில் பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா​வும் நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow