ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு
ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மாட்ரிட், பார்சிலோனா, லிஸ்போன், செவில்லே மற்றும் போர்டோ போன்ற முக்கியமான தொழில் நகரங்களும் அடங்கும். மின்வெட்டு காரணமாக ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
What's Your Reaction?