ஸ்குவாஷ் கால் இறுதியில் தன்வி கன்னா, அனஹத் சிங்
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது

ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளி ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 134-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தன்வி கன்னா, போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 76-வது இடமும் வகிக்கும் ஹாங் காங்கின் ஷிங் செங்குடன் மோதினார்.
இதில் தன்வி கன்னா 3-1 (11-7 11-8 8-11 12-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் 97-ம் நிலை வீராங்கனையான ஹாங் காங்கின் ஹெலன் டாங்குடன் மோதுகிறார் தன்வி கன்னா.
What's Your Reaction?