வீடுகளில் அழகு சாதன பொருள் தயாரிக்க உரிமம் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை!
இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயற்கையான அழகு சாதன பொருட்கள் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோவை: தமிழகத்தில் வீட்டில் தயாரித்த (ஹோம் மேட்) மற்றும் இயற்கையாக (நேச்சுரல்) தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் முககிரீம், சோப்பு, உதட்டு சாயம், கண் மை, பவுடர், தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் என பலரும் வீட்டிலேயே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயற்கையான அழகு சாதன பொருட்கள் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெறாமல் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) மற்றும் அழகுசாதன பொருள் உற்பத்தி நடைமுறை (ஜிஎம்பி) எதுவும் பின்பற்றாமல் பலரும் வீடுகளில் இருந்தே அழகு சாதன பொருட்களை தயாரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதைக் கண்காணிப்பது இப்போது மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
What's Your Reaction?