வில்லியம்சன், டேவன் கான்வே அதிரடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.

Feb 11, 2025 - 08:50
 0  2
வில்லியம்சன், டேவன் கான்வே அதிரடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி

லாகூர்: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.

லாகூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான மத்தேயு பிரீட்ஸ்கே 148 பந்துகளில், 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் 150 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் மத்தேயு பிரீட்ஸ்கே.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow