‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா... என்னை அழைப்பீர்!’ - அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார்.  நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார்.

Jan 29, 2025 - 12:05
 0  5
‘வில்லனை அடித்து ஹீரோவாக வேண்டுமா... என்னை அழைப்பீர்!’ - அடிவாங்கி சம்பாதிக்கும் மலேசிய இளைஞர்

மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார். நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ரவுடி கிடையாது. 'நானும் ரவுடிதான்' என்ற வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் நகல் ஆவார். ரவுடியாக, வில்லனாக நடித்து நூதன முறையில் அவர் பணம் சம்பாதித்து வருகிறார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்களது வீரத்தின் மீது காதலி, மனைவி சந்தேகம் கொள்கிறார்களா? அதற்காக கவலைப்பட வேண்டாம், வில்லனை அடித்து உதைத்து நீங்களும் ஹீரோவாக மாறலாம். உங்கள் காதலி, மனைவி முன்பு நீங்கள் வீர, தீரத்தை நிரூபிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow