விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் எப்படி?

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் பாடல் 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. 

Nov 8, 2025 - 19:30
 0  4
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் எப்படி?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தளபதி கச்சேரி' லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow