வாகைகுளம் சுங்கச் சாவடியில் ரூ.219 கோடி வசூல்: மத்திய அரசு தகவல்
திருநெல்வேலி-தூத்துக்குடி NH138-ன் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஏற்பட்ட மூலதனச் செலவு ரூ.568.14 கோடி . இதில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான மூலதனச் செலவுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி சேர்க்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச் சாவடியில் பயனர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.219 கோடி” என்று திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி: திருநெல்வேலி - தூத்துக்குடி NH138-ன் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஏற்பட்ட மூலதனச் செலவு ரூ.568.14 கோடி. இதில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத்துக்கான மூலதனச் செலவுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி சேர்க்கப்படவில்லை. வாகைகுளம் சுங்கச் சாவடியில் பயனர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.219 கோடி” என்று திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, “வாகைகுளம் சுங்கச் சாவடியில் நூறு சதவீத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை (NH138) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மோசமாகப் பராமரிக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு அறிந்திருக்கிறதா? அறிந்திருந்தால், அதன் விவரங்கள் என்ன?
What's Your Reaction?