வரிவிதிப்பு எச்சரிக்கைக்குப் பின்பு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது: ட்ரம்ப் பேச்சு
அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைக்கு எதிராக 150 சதவீத வரிவிதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் பிரிந்துவிட்டன என்று அதிபர் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைக்கு எதிராக 150 சதவீத வரிவிதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் பிரிந்துவிட்டன என்று அதிபர் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். அதனால் நான் பதவிக்கு வந்ததும், முதல் விஷயமாக டாலரை மாற்ற முயற்சிக்கும் எந்த ஒரு பிரிக்ஸ் நாட்டுக்கும் 150 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று எச்சரித்தேன். உங்கள் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்றேன். அதன் பின்னர் அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது." என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?