வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி

வங்கதேச விமானப்படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Jul 21, 2025 - 19:15
 0  4
வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி

டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வங்கதேச தலைநகரான டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூலை 21) வங்கதேச போர் விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். “இன்று மதியம் 1:06 மணிக்கு ஒரு F-7 BGI பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது” என்று வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow