வங்கதேச கரன்சியில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

வங்கதேச கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

Dec 7, 2024 - 05:10
 0  6
வங்கதேச கரன்சியில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

டாக்கா: வங்கதேச கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது வங்கதேசத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow