லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டது.
What's Your Reaction?