‘லவ்லி’ படக்குழுவுக்கு ‘நான் ஈ’ தயாரிப்பாளர் நோட்டீஸ்!
ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதீப் நடித்து, 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஈகா’.

ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதீப் நடித்து, 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஈகா’. இது தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது. ஈ ஒன்று பழிவாங்குவது போல இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், மலையாளத்தில் வெளியான ‘லவ்லி’ படக்குழு மீது, காப்புரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்போது பிரைம் வீடியோவில் வெளியான நிலையில் காப்புரிமை மீறல் புகார் எழுந்துள்ளது.
What's Your Reaction?