ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் தாக்கல் செய்ய ரவிமோகனுக்கு உத்தரவிட்டுள்ளது

Jul 23, 2025 - 21:25
 0  2
ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சென்னை: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் தாக்கல் செய்ய ரவிமோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.

தங்களது படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ.6 கோடியை திருப்பித் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனி வர்சல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதேபோல கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி அந்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகனும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow