ரூ.85,000-ஐ தாண்டியது தங்கம் விலை: ஒரே நாளில் ரூ.1,680 உயர்வு - புதிய உச்சத்துக்கு காரணம் என்ன?
தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இரு முறை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். இன்று ஒரே நாளில் பவுனுக்கு 1,680 அதிகரித்துள்ளது.

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இரு முறை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டி புதிய உச்சம் அடைந்துள்ளதால், பொதுமக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். இன்று ஒரே நாளில் பவுனுக்கு 1,680 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
What's Your Reaction?