ரூ.1 லட்சம் வரை விலை: ஓசூர் பகுதியில் ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
ஓசூர் பகுதியில், ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆடு வளர்ப்புக்கு உரிய விழிப்புணர்வும், ஆடுகள் வாங்க மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

ஓசூர் பகுதியில், ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆடு வளர்ப்புக்கு உரிய விழிப்புணர்வும், ஆடுகள் வாங்க மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பு சார்பு தொழிலாகவும் இருந்து வருகிறது. கால்நடை வளர்ப்பில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பரண் அமைத்து, ‘ஜமுனாபாரி’ இன ஆடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட இந்த ஆடுகள் 80 முதல் 140 கிலோ எடை வரை வளரக்கூடியது. ஆடுகளின் காதுகள் ஒரு அடி நீளம் வரை இருக்கும். ஆண் ஆடுகள் 5 அடியும், பெண் ஆடுகள் 4 அடி உயரமும் சராசரியாக வளரக்கூடியன.
What's Your Reaction?