ரீ-ரிலீஸுக்கு தயாராகும் விஜய்யின் ‘சச்சின்’

சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்பட மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சச்சின்’ மறுவெளியீடு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

Dec 28, 2024 - 18:35
 0  3
ரீ-ரிலீஸுக்கு தயாராகும் விஜய்யின் ‘சச்சின்’

விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘சச்சின்’. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினத்தில் ‘சச்சின்’ படத்தை மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்து பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

சமீபத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்பட மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சச்சின்’ மறுவெளியீடு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள், காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow