ரியல் மாட்ரிட் கிளப் அணியில் இருந்து விடைபெறும் லூகா மோட்ரிச்: ஸ்பெயின் ரசிகர்கள் பிரியாவிடை!

கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த கிளப் அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். அந்த அணியில் இருந்து விலகுகிறார் லூகா மோட்ரிச்.

May 26, 2025 - 22:25
 0  4
ரியல் மாட்ரிட் கிளப் அணியில் இருந்து விடைபெறும் லூகா மோட்ரிச்: ஸ்பெயின் ரசிகர்கள் பிரியாவிடை!

மாட்ரிட்: கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த கிளப் அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். அந்த அணியில் இருந்து விலகுகிறார் லூகா மோட்ரிச். சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டம்தான் ரியல் மாட்ரிட் அணிக்காக ஸ்பெயின் மண்ணில் அவர் விளையாடிய கடைசி போட்டி. அதில் 2-0 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் லூகா விளையாடி விடைபெற்றார். அடுத்த மாதம் ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார். ஆனால், அந்த தொடர் முழுவதும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதனால் தங்கள் ஆதர்ச நாயகனுக்கு ‘ஒன் லாஸ்ட் டைம்’ என்ற மனநிலையில் ஸ்பெயின் ரசிகர்கள் உற்சாகம் அளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow